புதுச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் தங்கள் ஆதரவாளர்கள் போட்டியிட ஆளும் கூட்டணிக்கு ஆதரவு தரும்சுயேச்சை எம்எல்ஏக்கள் காய் நகர்த்த தொடங்கியுள்ளனர். அதேநேரத்தில் அவர்களிடம் தோல்வியடைந்த ஆளும் கூட்டணியினர் இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதால் கூட்டணியில் சிக்கல் ஏற்பட் டுள்ளது.
புதுச்சேரியில் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் என்ஆர் காங்கிரஸ் - பாஜக - அதிமுக கூட்டணி வென்று ஆட்சியமைத்தது. இதில் அதிமுக ஒரு இடத்தில் கூட வெல் லவில்லை. அதே நேரத்தில் 6சுயேச்சை எம்எல்ஏக்கள் வென் றனர்.
என்ஆர் காங்கிரஸ் வேட்பாளர்க ளுக்கு எதிராக உழவர்கரை, திருபுவனை, ஏனாம் தொகுதிகளில் சுயேச்சையாக போட்டியிட்ட சிவசங்கர், அங்காளன், கொல்லப்பள்ளி சீனிவாச அசோக் ஆகியோர்வென்றனர். இவர்கள் மூவரும் பாஜ கவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அதேபோல் பாஜக போட்டியிட்ட திருநள்ளாறு, அதிமுக போட்டி யிட்ட உருளையன்பேட், முத்தி யால்பேட்டை தொகுதிகளில் சுயேச்சையாக போட்டியிட்ட சிவா, நேரு, பிரகாஷ்குமார் ஆகியோர் என்ஆர் காங்கிரஸூக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
6 சுயேச்சைகளும் தாங்கள் ஆதரவு தெரிவிக்கும் கட்சிகளின் கூட்டங்களில் பங்கேற்கின்றனர். தற்போது சுயேச்சை எம்எல்ஏக்கள் வரும் உள்ளாட்சித் தேர்தலில் தங்கள் ஆதரவாளர்கள் போட்டியிடகாய் நகர்த்த தொடங்கியுள்ளனர். இதனால் அவர்களிடம் தோல்விய டைந்த ஆளும் கூட்டணியைச் சேர்ந்தவர்கள் வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
இதுபற்றி அவர்கள் தரப்பில் கூறுகையில், “சட்டப்பேரவைத் தேர்தலில் எங்கள் தோல்விக்கான காரணம் எங்களுக்கு தெரியும். எங்களின் ஆதரவாளர்களுக்கு கவுன்சிலர் பதவிகளில் போட்டியிடவாய்ப்பு கேட்க தொடங்கியுள் ளோம். அதே நேரத்தில் கூட்ட ணிக்கு நாங்கள் கேட்கும் இடங் களை ஒதுக்கினாலும், வேட்பாளர் நிறுத்துவதில் எங்களை கலந்து ஆலோசிக்க வேண்டும்.
சுயேச்சை எம்எல்ஏக்களின் தொகுதியில் ஆளும் கூட்டணி யின் வேட்பாளர்கள் தான் களமிறங்க வேண்டும். கடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் போட்டியிட்ட வேட்பாளர்கள் பரிந் துரை செய்பவர்களைத்தான் உள்ளாட்சித் தேர்தலில் நிறுத்த வேண்டும்” என்று குறிப்பிடுவதால் கூட்டணியில் சிக்கல் எழுந்துள்ளது.