லட்சக்கணக்கான குடிமக்களை வறுமையிலிருந்து விடுவித்தீர்கள் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவரும், இந்தியாவின் முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங் அவர்கள் இன்று தனது 89 வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.
இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் எம்.,பி. ராகுல் காந்தி, வாழ்த்து தெரிவித்தார்.அவரைத் தொடர்ந்து, பிரதமர் மோடி மற்றும் அரசியல் கட்சியினர் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மன்மோகன் சிங் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “ முன்னாள் பிரதமர் டாக்டர். மன்மோகன் சிங்குக்கு எனது இதயபூர்வ வாழ்த்துகள்.
லட்சக்கணக்கான குடிமக்களை வறுமையிலிருந்து விடுவித்ததன் மூலம் நீங்கள் நாட்டிற்குச் செய்த சேவை மற்றும் பொருளாதார மந்தநிலையின் போது நீங்கள் ஆற்றிய முக்கியப் பங்கை யாராலும் மறக்க முடியாது” என்று பதிவிட்டுள்ளார்.