தூத்துக்குடியில் பாதுகாப்பு கேட்டு கனிமொழி எம்.பி.யிடம் மனு அளிக்க வந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் பெண்கள் . 
தமிழகம்

ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவு தெரிவிக்கும் பெண்கள் பாதுகாப்பு கேட்டு கனிமொழி எம்.பி.யிடம் மனு

செய்திப்பிரிவு

தூத்துக்குடியில் மூடப்பட்டிருக்கும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என வலியுறுத்தி கிராம மக்கள், கடலோர பகுதி மக்கள் சிலர் மாவட்ட ஆட்சியரிடம் மனுஅளித்து வருகின்றனர். இந்நிலையில் தங்களை ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்ட குழுவினர் மிரட்டி வருவதாகவும், தங்களுக்கு பாதுகாப்புவேண்டும் எனக் கோரியும் 5 ஆயிரம் பெண்கள் கையெழுத்திட்ட மனுவை கனிமொழி எம்.பி.யிடம் துளசி சோஷியல் டிரஸ்ட் இயக்குநர் தனலட்சுமி, சமூக ஆர்வலர்கள் நான்சி, இட்டாலி உள்ளிட்டோர் நேற்று அளித்தனர்.

மனுவில் கூறியிருப்பதாவது:

ஸ்டெர்லைட் நிறுவனம் மூலம் நாங்கள் கடந்த 15 ஆண்டுகளாக 300-க்கும் மேற்பட்ட மகளிர் குழு அமைத்துள்ளோம். இதன் மூலம் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தி உள்ளனர். கடந்த மூன்றரை ஆண்டுகளாக ஸ்டெர்லைட் நிறுவனம்மூடப்பட்டுள்ளதால் பல்வேறு நலத்திட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. சிறு தொழில்கள் செய்து வந்த எங்களது வாழ்வாதாரம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க ஆதரவு கொடுத்துவரும் பெண்களை ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக் குழுவினர் சிலர்மிரட்டுகின்றனர். சமூக ஊடகங்களில் எங்களைப் பற்றி அவதூறு பரப்புகின்றனர். கொலை மிரட்டல் விடுப்பதுடன், தகாத வார்த்தைகள் பேசுவது மற்றும் வீட்டுக்கே வந்து அச்சுறுத்துகின்றனர். பாதுகாப்பற்ற சூழலில் இருந்து வருகிறோம். எனவே, பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கவேண்டும், என தெரிவித் துள்ளனர்.

SCROLL FOR NEXT