தமிழகம்

வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் ஆபத்தான பொருட்களின் பேக்கிங்கை சோதனை செய்ய நவீன கூடம்: ரூ.2 கோடியில் சென்னையில் அமைக்கப்பட்டு வருகிறது

செய்திப்பிரிவு

வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய் யப்படும் ஆபத்தான பொருட் களின் பேங்கிங்கை சோதனை செய்வதற்காக ரூ.2 கோடி செலவில் நவீன சோதனைக் கூடம் சென்னை யில் அமைக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து, இந்தியன் இன்ஸ்டி டியூட் ஆஃப் பேக்கேஜிங் மையத் தின் இயக்குநர் என்.சி.சஹா சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:

வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் ஆபத்தான ரசாயனப் பொருட்களை பேக்கிங் (சிப்பம்) செய்யும்போது ஒவ்வொரு நாடும் ஒரு தர நிர்ணயத்தைப் பின்பற்று கின்றன. இதனால், ஏற்றுமதி சந்தையில் பல்வேறு தடைகள் ஏற்பட்டன. இதையடுத்து, ஐக்கிய நாடுகள் நிபுணர் குழு 1958-ம் ஆண்டு ‘சர்வதேச கடல் வழிப் போக்குவரத்து அபாயகரமான பொருட்கள் ஒழுங்குமுறைச் சட்டம்’ எனும் கையேட்டை வெளியிட்டது. இதில் அபாயகரமான பொருட்கள் அதன் அபாய அளவைப் பொறுத்து 9 வகைகளாக பிரிக்கப்பட்டன.

மேலும், இப்பொருட்களை கடல் வழியாக ஏற்றுமதி செய்யும்போது அவற்றை பேக்கிங் செய்வதற்கான சில அறிவுறுத்தல்களை தெரிவித் துள்ளது. இதன்படி, கடல் மற்றும் வான் வழியாக ஏற்றுமதி செய்யப் படும் ரசாயனம் போன்ற அபாய கரமான பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு முன்பு அவற்றை எங்கள் மையத்தில் கொண்டு வந்து பேக்கிங்கை சோதனை செய்ய வேண்டும். நாங்கள் சான்றளித்த பிறகுதான் அவற்றை ஏற்றுமதி செய்ய முடியும்.

ஆனால் சில ஏற்றுமதியாளர்கள் இவ்வாறு முறையான அனுமதி பெறுவது குறித்து தெரியாமல் ஏற்று மதி செய்கின்றனர். இதனால் பல் வேறு சிக்கல்களை அவர்கள் சந்திக் கும் நிலை ஏற்படுகிறது. எனவே இதுகுறித்து ஏற்றுமதியாளர் களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்து வதற்காக நாளை (இன்று) சென் னையில் ஒருநாள் கருத்தரங்கு நடை பெறுகிறது.

இக்கருத்தரங்கில், ஆபத்தான பொருட்களை சர்வதேச கடல்சார் ஏற்றுமதி சட்டத்தின்படி ஏற்றுமதி செய்யும்போது எத்தகைய தரத்தில் அவற்றை பேக்கிங் செய்ய வேண் டும் என்பது குறித்து விளக்கப்படும். இக்கருத்தரங்கில் சுங்கத் துறை, விமானத் துறை உயர் அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.

வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் ஆபத்தான பொருட் களை சோதனை செய்வதற்காக ரூ.2 கோடி செலவில் நவீன சோதனைக் கூடம் சென்னையில் அமைக்கப்பட்டு வருகிறது. 50 ஆயி ரம் சதுர அடி பரப்பளவில் அமைக் கப்பட உள்ள இந்த சோதனைக் கூடம் 5 மாடிகளை கொண்டது. கன்டெய்னர்கள் மூலம் ஏற்றுமதி செய்யப்படும் ரசாயனப் பொருட்கள் இங்கு சோதனை செய்யப்படும். 3 மாதங்களுக்குள் இந்த சோதனைக் கூடம் பயன்பாட்டுக்கு வரும்.

SCROLL FOR NEXT