அதிமுக, தேமுதிக, பாமகவைச் சேர்ந்த 1,459 பேர் நேற்று திமுகவில் இணைந்தனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தருமபுரி மாவட்டக் குழு முன்னாள் உறுப்பினர் என்.பி.சிவாஜி, தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்க முன்னாள் தலைவர் பி.கோவிந்தன், தமிழ்நாடு மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி இயக்குபவர்கள் மற்றும் துப்புரவுப் பணியாளர்கள் சங்கத் தலைவர் கே.கிருஷ்ணன் உள்ளிட்டோர் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினை சந்தித்து அக்கட்சியில் இணைந்தனர். மேலும் தருமபுரி மாவட்டம் ஏரியூர் ஒன்றியத்தைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், அதிமுக, பாமக, தேமுதிக ஆகிய கட்சிகள், விவசாயிகள் சங்கம், வணிகர் சங்கம், மாதர் சங்கம் ஆகியவற்றின் நிர்வாகிகள் 1,459 பேர் நேற்று திமுகவில் இணைந்தனர். அப்போது திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தேர்தல் பணிக்குழு செயலாளர் டி.எம்.செல்வகணபதி, தருமபுரி மாவட்ட திமுக செயலாளர் பெ.சுப்பிரமணி, பி.என்.பி.இன்பசேகரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.