பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, 2-வது முறையாக சென்னையில் களமிறங்குகிறார்.
எச்.ராஜா - தியாகராய நகர்:
பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவுக்கு தேர்தல் களம் புதி தல்ல. 1989-ல் இருந்து தொடர்ந்து தேர்தலில் போட்டியிடும் அவர் 2001-ல் திமுக கூட்டணியில் தனது சொந்த ஊரான காரைக்குடி தொகுதி யில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆனார். பள்ளிப் பருவத்தில் இருந்து ஆர்எஸ்எஸ் அமைப்பில் இருக்கும் அவர், கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பாஜகவில் மாநில அளவில் பொறுப்பு வகித்து வருகிறார். தற்போது ரயில்வே பயணிகள் நல வாரியத் தலைவராகவும் இருந்து வருகிறார். கடந்த 2006 தேர் தலில் சென்னை புறநகர் தொகுதி யான ஆலந்தூரில் போட்டியிட்டு தோல்வி அடைந்த அவர், 2-வது முறையாக சென்னை தியாகராய நகர் தொகுதியில் போட்டியிடுகிறார்.
வானதி சீனிவாசன் - கோவை தெற்கு
பாஜக மாநில துணைத் தலை வரான வானதி சீனிவாசன், ஆர்எஸ்எஸ் மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி) மாநில இணை அமைப் பாளராக இருந்தவர். கோவை உலி யம்பாளையம் கிராமத்தில் பிறந்த அவர், 2011 தேர்தலில் சென்னை மயி லாப்பூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். தற்போது முதன்முறையாக சொந்த மாவட்ட மான கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார்.
பாஜகவில் மாநிலச் செயலாளர், மாநிலப் பொதுச்செயலாளர் போன்ற பொறுப்புகளை வகித்த அவர் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர். இவரது கணவர் சீனிவாசன் உதவி சொலிசிட்டர் ஜெனலராக இருக்கிறார்.
எம்.சக்கரவர்த்தி - திருத்தணி:
பாஜக மாநில துணைத் தலை வரான எம்.சக்கரவர்த்தி, ஆங்கிலே யர் ஆட்சிக் காலத்தில் சென்னை மாகாண முதல்வராக இருந்த முனுசாமி நாயுடுவின் பேரன். இவரது மாமனார் ராமலு நாயுடு, சுமார் 25 ஆண்டுகள் திருத்தணி நகராட்சித் தலைவராக இருந்தவர். 1997-ல் பாஜகவில் இணைந்த இவர், மாநிலப் பொருளாளர், தேசிய வணிகர் பிரிவு துணைத் தலைவர் போன்ற பொறுப்புகளை வகித்துள்ளார். 2001 தேர்தலில் திமுக கூட்டணியில் பள்ளிப்பட்டு தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர், தற்போது திருத்தணி யில் களமிறங்குகிறார். நட்சத்திர ஹோட்டல் நடத்தி வருகிறார்.
காளிதாஸ் - சைதாப்பேட்டை
2006, 2011 தேர்தலில் சைதாப் பேட்டை தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்த காளிதாஸ், மீண்டும் இதே தொகுதியில் போட்டியிடுகிறார். 23 ஆண்டுகளாக பாஜகவில் இருக்கும் இவர், ஆர்எஸ்எஸ் அமைப்பில் இருந்து அரசியலுக்கு வந்தவர்.