தமிழகம்

தமிழகத்தில் 5 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு டிஜிபி அந்தஸ்து: அரசு உத்தரவு

செய்திப்பிரிவு

தமிழத்தில் ஐந்து ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு டிஜிபி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து உள்துறைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர் இன்று பிறப்பித்துள்ள உத்தரவு:

தமிழக அரசு, 1990 பேட்ச்சை சேர்ந்த, ஏடிஜிபி அந்தஸ்தில் உள்ள 5 ஐபிஎஸ் அதிகாரிகளை டிஜிபி அந்தஸ்துக்கு பதவி உயர்வு செய்துள்ளது.

1. சங்கர் ஜிவால் ஐபிஎஸ்,
2. ஏ.கே.விஸ்வநாதன் ஐபிஎஸ்,
3. ஆபாஷ் குமார் ஐபிஎஸ்,
4. டி.வி.ரவிச்சந்திரன் ஐபிஎஸ்,
5. சீமா அகர்வால் ஐபிஎஸ்,

ஆகிய ஐந்து பேரும் டிஜிபியாக பதவி உயர்வு செய்யப்படுகிறார்கள்.

இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT