தமிழகம்

எஸ்எஸ்எல்சி ஆங்கிலம் முதல் தாள் தேர்வு எளிது: மாணவ-மாணவிகள் மகிழ்ச்சி

செய்திப்பிரிவு

எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு மார்ச் 15-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழ் தேர்வு முடிவடைந்த நிலையில், ஆங்கிலம் முதல் தாள் தேர்வு நேற்று நடந்தது. பொதுவாக ஆங்கில தேர்வு கடினமாக இருக்கும் என்று மாணவர்கள் அச்சப்படுவது வழக்கம். ஆனால், வினாத்தாள் எளி தாக இருந்த காரணத்தால் தேர்வெழுதிவிட்டு வெளியே வந்த மாணவ-மாணவிகள் மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர்.

கேள்விகள் எளிதாக இருந்ததாக வும், குறைந்தபட்ச தேர்ச்சிக்காக அரசு வழங்கியிருந்த கற்றல் கையேட்டில் இருந்து அதிகப்படியான வினாக்கள் கேட்கப்பட்டிருந்ததாகவும் அவர்கள் கூறினர். ஆங்கிலம் முதல் தாள் வினாத் தாள் எளிதாகவே இருந்தது என்று ஆங் கில ஆசிரியர்களும் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT