சென்னை பட்டினப்பாக்கத்தில் செட்டிநாடு அரண்மனை உள்ளது. நேற்று முன்தினம் அரண்மனை வளாகத்தில் நிறுத்தப்பட் டிருந்த மறைந்த தொழிலதிபர் எம்.ஏ.எம்.ராமசாமிக்கு சொந்தமான 2 சொகுசு கார் களை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த எம்.ஏ.எம்.ராமசாமியின் அண்ணி குமார ராணி மீனா முத்தையா, பட்டினப் பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க சென்றார். போலீஸார் புகாரை பதிவு செய்ய மறுத்ததாக தெரிகிறது.
இதையடுத்து அவர் நீதிமன்றத்துக்கு சென்றார். நீதிமன்ற உத்தரவுப்படி, பட்டினப்பாக்கம் போலீஸார் எம்.ஏ.எம்.ராமசாமியால் புதல்வராக சுவீகாரம் எடுக் கப்பட்ட முத்தையாவின் ஆதரவாளர்கள் 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.