தமிழகத்தில் காவல் துறை உயர் அதிகாரிகள் 10 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து உள்துறைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர் இன்று பிறப்பித்துள்ள உத்தரவு:
''சென்னை ஆயுதப்படை ஏடிஜிபியாக இருந்த ஜெயந்த் முரளி, சிலைகடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஜிபியாக பணியிட மாற்றம்செய்யப்பட்டுள்ளார்.
சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஏடிஜிபியாக இருந்த அபய்குமார் சிங், சென்னை ஆயுதப்படை ஏடிஜிபியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
விடுப்பில் இருந்து திரும்பிய ஐ.ஜி. மகேந்தர் குமார் ரத்தோட், தமிழ்நாடு சீருடைப் பணியாளர்தேர்வாணைய உறுப்பினர் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சீருடைப் பணியாளர் தேர்வாணைய உறுப்பினர் செயலராக இருந்த கார்த்திகேயன், திருச்சி மாநகரக் காவல் ஆணையராகவும், திருச்சி காவல் ஆணையராக இருந்த அருண், சென்னை காவல் துறை பயிற்சிக் கல்லூரி ஐ.ஜி.யாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மத்திய அயல் பணியில் இருந்து திரும்பிய டிஐஜி சரவணசுந்தர், திருச்சி சரக டிஐஜியாகவும், திருச்சி சரக டிஐஜியாக இருந்த ராதிகா, சென்னை டிஐஜியாகவும் (பொது நிர்வாகம்) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மருத்துவ விடுப்பில் இருந்த எஸ்.பி. நிஷா, விடுப்பு முடிந்து திரும்பிய நிலையில், சென்னைகாவல் துறை கணினிமயமாக்கல் பிரிவு எஸ்.பி.யாக நியமிக்கப்பட் டுள்ளார்.
சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு பிரிவு எஸ்.பி.யாக இருந்த மாடசாமி, சேலம் (வடக்கு) சட்டம் ஒழுங்கு துணை ஆணையராகவும், சேலம் குற்றம், போக்குவரத்து துணை ஆணையராக இருந்த வேதரத்தினம், சென்னை டிஜிபி அலுவலக பணியமைப்புப் பிரிவு உதவி ஐ.ஜி.யாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்''.
இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.