சத்யா 
தமிழகம்

‘இந்து தமிழ் திசை’, - ஃபிட்னெஸ் @ சாடீஸ் இணைந்து நடத்தும் குழந்தைகளுக்கான ‘ஜூம்பா பூட்கேம்ப்’ வகுப்புகள்: ஆன்லைனில் அக்.4-ம் தேதி தொடங்குகிறது

செய்திப்பிரிவு

பள்ளி மாணவ - மாணவிகள் ஆன்லைனில் பங்கேற்று பயன்பெறும் வகையில், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், ஃபிட்னெஸ் @ சாடீஸ் உடன் இணைந்து நடத்தும் ‘ஜூம்பா பூட்கேம்ப்’ ஆன்லைன் வகுப்புகள் அக்.4-ம் தேதி தொடங்கி5 நாட்கள் நடைபெற உள்ளது.

மாணவர்களுக்கு பயனளிக்கும் விதமாக, ‘இந்து தமிழ் திசை’நாளிதழ் பல்வேறு செயல்பாடுகளை ஆன்லைனி்ல தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது. அதன்ஒரு பகுதியாக, ‘ஜூம்பா பூட்கேம்ப்’எனும் ஆன்லைன் பயிற்சி வகுப்பை 5 நாட்கள் நடத்துகிறது. வரும் அக்.4-ம் தேதி தொடங்கி 8-ம் தேதி வரை தினமும் மாலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை நடைபெறவுள்ளது. இதில் 11 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் அனைவரும் பங்கேற்கலாம்.

இந்த பயிற்சி வகுப்பை நடத்தவுள்ள சத்யா, கடந்த பல ஆண்டுகளாக இத்தகைய வகுப்புகளை திறம்பட நடத்தி வருபவர். இதுவரை 200-க்கும் மேற்பட்ட ஆன்லைன் வகுப்புகளை பெண்களுக்காகவும், குழந்தைகளுக்காகவும் நடத்தியுள்ளார்.

ஜூம்பா பூட்கேம்ப்-பில் பங்கேற்பதால் குழந்தைகளின் மன அழுத்தம் குறையும். தன்னம்பிக்கை அதிகரிப்பதோடு குழந்தைகளின் ஞாபக சக்தியும்அதிகரிக்கும். மேலும், குழந்தைகளின் உடலிலுள்ள கொழுப்பை கட்டுப்படுத்தி, அவர்களது உடல் பருமன் குறைந்து, நீரிழிவு நோய் வராமல் தடுக்கப்படுகிறது.

இந்தப் பயிற்சி வகுப்பின்போது பங்கேற்பாளர்கள் விளையாட்டு காலணிகளை அணிய வேண்டும். நிகழ்வின்போது ஆடியோ, வீடியோஇணைப்புகளில் இருக்க வேண்டும்.

இதில் பங்கேற்க விரும்புபவர்கள் https://www.htamil.org/00063 என்ற இணையதளத்தில் ரூ.589 பதிவுக் கட்டணம் செலுத்தி, பதிவு செய்ய வேண்டும்.

கூடுதல் விவரங்களுக்கு 8248751369 என்ற செல்பேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

SCROLL FOR NEXT