காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
செப்.23-ம் தேதி (இன்று) கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழையும், கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் இடி, மின்னலுடன்மிதமான மழையும் பெய்யும்.
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரில்பரவலாக இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக் கூடும்.
இவ்வாறு அவர் கூறினார்