மு.க.அழகிரியுடன் ம.தி.மு.க. வேட்பாளர்கள் இருவர் செவ்வாய்க் கிழமை சந்தித்தனர். மக்கள் விடு தலைக்கட்சியைச் சேர்ந்த முருகவேல்ராஜனும் சந்தித்து காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு கேட்டார்.
தி.மு.க.வில் இருந்து தற்காலிக மாக நீக்கப்பட்டுள்ள மு.க. அழகிரியை செவ்வாய்க்கிழமை ம.தி.மு.க.வின் தென்காசி தொகுதி வேட்பாளர் டாக்டர் சதன் திருமலைக்குமார், தூத்துக்குடி வேட்பாளர் ஜோயல் ஆகியோர் சந்தித்தனர். தங்கள் வெற்றிக்கு ஆதரவு தரும்படியும் அவர்கள் கேட்டுக்கொண்டனர்.
பின்னர் நிருபர்களிடம் பேசிய அவர்கள், எங்கள் தலைவர் வைகோ வழியில், மு.க.அழகிரியை நாங்கள் இன்று சந்தித்தோம். சந்திப்பு மகிழ்ச்சியாக இருந்தது. ம.தி.மு.க. போட்டியிடும் அனைத் துத் தொகுதிகளிலும் வெற்றிபெற உறுதியாக நிற்பேன் என்று மு.க.அழகிரி உறுதியாகச் சொல்லி யிருக்கிறார். அந்த உறுதியோடு, நம்பிக்கையோடு நாங்கள் விடை பெறுகிறோம். வெற்றி நிச்சயம் என்று அவர்கள் கூறினர். அப்போது மாவட்டச் செயலர்கள் புதூர் பூமிநாதன், சரவணன் ஆகியோர் உடனிருந்தனர். அதைத் தொடர்ந்து முருகவேல்ராஜன் அழகிரியைச் சந்தித்து காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு கேட்டார்.