தமிழகம்

கலை பண்பாட்டுத் துறை ஆணையர் உட்பட 5 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

செய்திப்பிரிவு

கலை பண்பாட்டுத் துறை ஆணையர் வி.கலையரசி உட்பட 5 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து தலைமைச் செயலர் வெ.இறையன்பு வெளியிட்ட அறிவிப்பு:

கலை மற்றும் பண்பாட்டுத்துறை ஆணையாராக இருந்த வி.கலையரசி, பொது மற்றும் மறுவாழ்வுத்துறை சிறப்பு செயலலாகவும், ஈரோடு டிஆர்டிஏ திட்ட இயக்குநர் பிரதிக் தயாள், நிதித்துறை துணை செயலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பொதுத்துறை துணை செயலர் எம்.பிரதீப்குமார், தமிழ்நாடு குடிநீர் மற்றும் கழிவுநீர் வாரிய இணை மேலாண் இயக்குநராகவும், சிதம்பரம் உதவி ஆட்சியர் எல்.மதுபாலன், ஈரோடு டிஆர்டிஏ திட்ட இயக்குநராகவும், கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் சார் ஆட்சியர் எம்.சிவகுரு பிரபாகரன், சென்னை பெருநகர மாநகராட்சி வடக்கு மண்டல துணை ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கூடுதல் பொறுப்பு

மேலும், உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறையின் சிறப்பு அதிகாரி ஷில்பா பிரபாகர் சதீஷ், சிறப்பு திட்ட செயலாக்கத் துறையின் இணை செயலாளர் பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பார்.

இவ்வாறு தலைமைச் செயலர் வெ.இறையன்பு தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT