கள்ளக்குறிச்சி மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வழக்கத்திற்கு மாறாக குறைவான எண்ணிக்கையிலேயே வேட்பாளர்கள் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர். இந்தத்தேர்தலைப் பொறுத்தவரையில் வாக்க ளர்கள் மத்தியில் சோர்வும், வேட்பாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியும் காணப்படுகிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இரு கட்டங் களாக நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தொடக்கத்தில் வேட்புமனு தாக்கல்மந்தமாக இருந்து வந்த நிலையில் கடைசி நாளான நேற்று வேட்புமனுத்தாக்கல் விறுவிறுப்பு அடைந்தது. 3,773 பதவி இடங்களுக்கு கடைசி நாளான நேற்று வரை 9,385 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
9,385 பேர் மனுத் தாக்கல்
கள்ளக்குறிச்சி மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 19 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 91 நபரும்,180 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு 577 நபர்களும், 412 ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 1,659 பேரும், 3,162 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 7,058 பேரும் என மொத்தம் 9,385 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்துள் ளனர்.
ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களும், அரசியல் கட்சியினரும் இந்த வேட்புமனுத் தாக்கல் எண்ணிக்கை குறைவு என்கின்றனர். 3,773 பதவி இடங்களுக்கு குறைந்த பட்சம் 10 ஆயிரம் நபர்களாவது வேட்புமனு தாக்கல் செய்திருக்க வேண்டும். ஆனால் 9 ஆயிரம் என்பது குறைவு தான்.
வெற்றி பெற்றால் பதவிக் காலம் 3 ஆண்டுகள் தான் நீடிக்கும் என்பதால், ஏற்கெனவே செலவு செய்து தேர்தல் ரத்தாகி விட்ட நிலையில் மீண்டும் செலவு செய்வது என்பது தேவையில்லாதது என எண்ணி பலர் போட்டியிடுவதை தவிர்த்து விட்டதாகக் கூறுகின்றனர்.
பெரும்பான்மையான போட்டியிடங் களில் சராசரியாக இருவர் மட்டுமே போட்டியாளர்கள் உள்ளனர். இதனால் வேட்பாளர் களுக்கான செலவு குறைவதற்கான வாய்ப்பு அதிகம் என்பதால், வேட்பாளர்கள் மகிழ்ச்சியோடு காணப்படுகின்றனர்.
போட்டியாளர்கள் குறைந்து போனதால் வாக்காளர்களுக்கு கிடைக்க வேண்டிய பரிசுப் பொருட்கள், ரொக்கம் உள்ளிட்டவை கிடைப்பதற்கான வாய்ப்பு குறைந்து விட்டதாக கிராமப்புறங்களில் உள்ள வாக்காளர்கள் கருதுகின்றனர்.