தமிழகம்

ம.ந.கூட்டணி எப்படி? ஜான்பாண்டியன் விளக்கம்

செய்திப்பிரிவு

மக்கள் நலக் கூட்டணியை நாங்கள் ஒரு கூட்டணியாகவே ஏற்றுக்கொள்ளவில்லை. கடைசிவரை அவர்கள் ஒற்றுமையாக இருப்பார்களா என்பது சந்தேகமே என்று தமிழக மக்கள் முன்னேற்ற கழகத் தலைவர் ஜான்பாண்டியன் தெரிவித்தார்.

திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜராக வந்த ஜான்பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறு கையில், ‘‘அதிமுக ஆட்சியில் மக்கள் நலத் திட்டங்கள் மக்களிடம் சென்றடைந்துள்ளன. அதிமுக கூட்டணிதான் வெற்றிபெறும். நாங்கள் அதிமுக கூட்டணியில்தான் உள்ளோம். சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிட 5 இடங்களை கேட்போம். நானும் போட்டியிடுவேன்’’ என்றார்.

SCROLL FOR NEXT