தமிழகம்

சாஸ்த்ரா பல்கலை.யில் ‘தக் ஷ்’ தொழில்நுட்ப விழா: நாளை தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது

செய்திப்பிரிவு

நாடு முழுவதும் பொறியியல் படிப்பு படித்துவரும் மாணவ, மாணவியர்கள் தங்களின் திறனை வெளிப்படுத்தும் வகையில் ‘தக் ஷ்' என்ற 3 நாள் தொழில்நுட்ப விழா நடக்கவுள்ளது. சாஸ்த்ரா பல்கலைக்கழகம் 10-வது முறை யாக இந்த விழாவை நடத்துகிறது.

வகுப்பறைக்குள் படிக்கும் வழக்கமான முறைக்கு மாற்றாக மகிழ்ச்சியான அனுப வத்தை ஏற்படுத்தவும், மாணவர்கள் தங்களின் திறனை வெளிப்படுத்தும் வாய்ப்பை வழங்கவும் ‘தக் ஷ்' தொழில்நுட்ப விழா நடத்தப்படுகிறது. பிப்ரவரி 19, 20, 21 ஆகிய தேதிகளில் இந்நிகழ்ச்சி நடக்கும்.

நிகழ்ச்சியின்போது எஸ்.எஸ்.பி. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சார்பில் பிஎம்டபிள்யு, மெர்சிடெஸ், ஜாக்குவார், ஹார்லி டேவிட்சன் உள்ளிட்ட வாகன உற்பத்தியாளர்களின் தயாரிப்புகள் பார்வைக்கு வைக்கப்படும். மாலை நேரங்களில் இந்த வாகனங்களின் அணிவகுப்பும் நடக்கும்.

பேபேல், அமேசான், ஈபே, லாஜிடெக் உள்ளிட்ட பெரிய நிறுவனங்களில் மாணவர்கள் பயிற்சி மேற்கொள்ள வாய்ப்பு வழங்கப்படுகிறது. முதலில் சிறிய எழுத்துத் தேர்வும், பின்னர் நேர்காணலும் நடைபெறும். இதில் பங்கேற்று தேர்வாகும் மாணவர்கள் இந்த நிறுவனங்களில் பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.

அனைத்து பொறியியல் பிரிவுகளிலிருந்தும் மாணவர்கள் 6 குழுக்களாக பிரிக்கப்பட்டு, 5 விதமான போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெறும் குழுவுக்கு ரூ.40 ஆயிரம் பரிசு வழங்கப்படும். மேலும் ரோபாட்டிக்ஸ், கணினி தொழில்நுட்பம், விமானவியல் உள்ளிட்ட பிரிவுகளில் பயிலரங்கம் நடைபெறும்.

3 நாட்களும் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் அனைத்து கல்லூரி மாணவர்களும் கலந்துகொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு www.daksh.sastra.edu என்ற முகவரியை காணலாம். இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT