சென்னையில் உள்ள ரஷ்ய அறிவியல் மற்றும் கலாச்சார மையத்தில் அமைக்கப்பட்டிருந்த சிறப்பு வாக்குப்பதிவு மையத்தை ஆய்வு செய்தார் ரஷ்ய துணைத் தூதர் ஒலெக் அவ்தீவ்படங்கள்: க.ஸ்ரீபரத் 
தமிழகம்

ரஷ்ய நாடாளுமன்றத் தேர்தல்: சென்னை சிறப்பு மையத்தில் ரஷ்யர்கள் வாக்களிப்பு

செய்திப்பிரிவு

ரஷ்ய நாட்டின் நாடாளுமன்ற கீழ்சபை உறுப்பினர் பதவிக்கான தேர்தல் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. இதன்மூலம் 450 பிரதிநிதிகள் தேர்வு செய்யப்படுவார்கள். அதன்படி 2021-ம் ஆண்டுக்கான தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 17-ம் தேதி தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தது.

இந்நிலையில், உலகம் முழுவதும் உள்ள ரஷ்யர்கள் அனைவரும் இந்த தேர்தலில் வாக்களிக்கும் வகையில், அந்தந்த நாடுகளில் உள்ள தூதரகம் மூலம் சிறப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதன்படி, சென்னை ரஷ்ய துணைத் தூதரகம் சார்பில், தென் மாநிலங்களில் வசிக்கும் ரஷ்யர்கள் வாக்களிக்க தமிழகம், ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களில் கடந்த 5, 8, 11 மற்றும் 12-ம் தேதிகளில் சிறப்பு வாக்குப் பதிவு மையங்கள் அமைக்கப்பட்டன. இதன்மூலம் 110 பேர் வாக்களித்தனர்.

வாக்குப்பதிவின் இறுதிநாளானநேற்று சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ரஷ்ய கலாச்சார அறிவியல் மையத்தில் வாக்குப்பதிவு மையம் அமைக்கப்பட்டிருந்தது. தென் மாநிலங்களில் வாழும் ரஷ்யர்கள் பலர் ஆர்வமுடன் வந்துவாக்களித்தனர். ரஷ்ய துணைத் தூதர் ஒலெக் அவ்தீவ் நேற்று காலை வாக்குப்பதிவு மையத்தை ஆய்வு செய்து, பின்னர் வாக்களித்தார்.

கரோனா பரவலால் கடும் பாதுகாப்பு ஏற்பாடுகளும், கட்டுப்பாடுகளும் பின்பற்றப்பட்டன. காலை 8 முதல் இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நடத்தப்பட்டதாக ரஷ்ய துணைத் தூதரகம் தெரிவித்தது.

SCROLL FOR NEXT