கோவை காந்திபுரத்தில் உள்ள மாவட்ட பாஜக அலுவலகத்தில் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில் 100-க்கு மேற்பட்டவர்கள் கட்சியில் இணையும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
அதன்பிறகு செய்தியாளர் களிடம் அண்ணாமலை கூறும்போது, “நீட் தேர்வு ரத்து குறித்துதிமுகவினர் வாக்குறுதி அளித்தனர்.திமுகவினர் இந்த தேர்வை வைத்து அரசியல் செய்து வருகின்றனர். நீட் தேர்வு தற்கொலைகள் வருத்தம் அளிக்கின்றன. ஆளும் அரசு நீட் தேர்வு குறித்து பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். இந்த தேர்வு சமூக நீதியை நிலைநாட்டும் தேர்வு. உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றிக் கூட்டணியாக இருக்கும். தமிழக அரசு விதித்த அனைத்து கட்டுப்பாடுகளையும் மதித்து பிரதமர் மோடியின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகிறது” என்றார்.
நடிகர் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக உள்ளாட்சி தேர்தலில் நிற்கும் வேட்பாளர்கள் குறித்த கேள்விக்கு, “மக்களுக்கு நல்லது நினைப்பவர்கள் யாரக இருந்தாலும் அரசியலுக்கு வரலாம்” என்றார்.
நிகழ்வில் பாஜக சிறுபான்மை பிரிவு தேசிய செயலர் வேலூர் இப்ராஹீம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.