தமிழகம்

740 ஆண்டு பழமையான காளிங்கராயன் அணை: ரூ. 7.80 கோடியில் புனரமைப்பு - ஓ.பன்னீர்செல்வம் தகவல்

செய்திப்பிரிவு

சட்டப்பேரவையில் நேற்று இடைக்கால பட்ஜெட் மீதான விவாதத்தில் தேமுதிக உறுப்பினர் வி.சி.சந்திரகுமார் பேசினார். அப்போது அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் குறுக்கிட்டு பேசியதாவது:

ஈரோட்டில் உள்ள காளிங்கராயன் கால்வாய், பவானி ஆற்றின் குறுக்கில் கட்டப்பட்டுள்ள காளிங்கராயன் அணைக்கட்டில் இருந்து பிரியும் பழமையான கால்வாய். இந்தக் கால்வாயில் தோல் தொழிற்சாலை கழிவுகள், ஈரோடு மாநகராட்சி கழிவுநீர் கலந்ததால் மக்கள் பயன்படுத்த முடியாத நிலை இருந்தது.

இதையடுத்து, காளிங்கராயன் கால்வாயில் கழிவுநீர் கலக்காமல் தடுக்க, ரூ.91 கோடியில் பேபி கால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால், காளிங்கராயன் கால்வாய் நீரை அன்றாட உபயோகத்துக்கு மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். மேலும், 740 ஆண்டுகள் பழமையான காளிங்கராயன் அணைக்கட்டு ரூ.7 கோடியே 80 லட்சம் செலவில் புனரமைக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT