பொதுமக்கள் வசதிக்காக சார்பதிவு அலுவலக எல்லைகள் மாற்றி அமைக்கும் பணி தொடங் கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பதிவுத்துறை நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
பதிவுத் துறையில் கடந்த ஏப்.1 முதல் செப்.16-ம் தேதி வரையிலான காலத்தில் ரூ.5,388.87 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. கடந்தாண்டு இதே காலகட்டத்தில் ஈட்டப்பட்ட வருவாய் ரூ.3,052.87 கோடியுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு ரூ.2 ஆயிரம் கோடிக்கும்அதிகமாக வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. பதிவுத் துறையில் ஏற்படுத்தப்பட்டுள்ள புதிய மாற்றங்களின் விளைவாக இத்துறையின் வருவாய் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
பதிவுத் துறை சாதனை
இந்த நிதியாண்டின் முதல் 3 மாதங்களில் வருவாய் குறைந்து இருந்த போதிலும், வணிகவரித் துறை அமைச்சர் பி.மூர்த்தியின் நடவடிக்கையால், அடுத்தடுத்த மாதங்களில் வருவாய் சீரமைக்கப்பட்டு கடந்த செப்.16-ம் தேதி ஈட்டப்பட்ட வருவாயானது, பேரிடர்இல்லாத இயல்பு நிலை காலத்துக்கான வருவாயை விட அதி கரித்துள்ளது. இது பதிவுத் துறை யின் சாதனையாகும்.
மேலும், சார்பதிவு அலுவலக எல்லைகள் பொதுமக்களின் வசதிக்கேற்ப சீரமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் அறிவித்திருந்தார். இதற்கான பணிகளும் தற்போது தொடங்கப்பட்டுள்ளன. தங்கள் பகுதியில் சீரமைக்கப்பட வேண்டிய சார்பதிவு எல்லைகள் குறித்ததகவல்களை அந்தந்த மாவட்டபதிவாளர்களுக்கு எழுத்துப்பூர்வமாக பொதுமக்கள் தெரிவிக்கலாம் என்றும் அமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.