மதுரை-போடி ரயில் இயங்கி 11 ஆண்டுகளானதால் தண்ட வாளத்தின் இரு பக்கமும் அதிகமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. தற் போது அப்பகுதிகள் வாழை, கரும்புத் தோட்டங்களாக உருமாறி கிடக்கின்றன.
நாடு சுதந்திரத்துக்கு முன்பு ஏலக்காய் வர்த்தகத்துக்காக போடியில் இருந்து மதுரை வரை ரயிலுக்கான வழித்தடத்தை ஆங்கிலேயர் ஏற்படுத்தினர். மீட்டர்கேஜ்ஜை விட குறைவான அகலத்திலேயே அப்போது தண்ட வாளங்கள் அமைக்கப்பட்டன. முதல் ரயில் 1928-ம் ஆண்டு நவ.20-ல் இயக்கப்பட்டது.
1953-54-ம் ஆண்டு இந்த வழித்தடம் மீட்டர்கேஜ் பாதையாக மாற்றப்பட்டது. இந்நிலையில் இதனை அகலப் பாதையாக மாற்றுவதற்காக 2010-ல் ரயில் சேவை நிறுத்தப்பட்டது. ரூ.450 கோடி மதிப்பீட்டில் 2011-ம் ஆண்டில் பணிகள் தொடங்கின. 90 கி.மீ. தூரம் உள்ள இப்பாதை மதுரையில் இருந்து உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, தேனி, போடி என்று 4 கட்டங்களாக நடைபெற்றது.
குறைவான நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பணிகள் தாமதமாகவே நடந்தன. அரசியல் அழுத்தம், பல்வேறு போராட்டங்களால் கடந்த 3 ஆண்டு களாக பணிகள் வேகம் பெற்று நடந்து வருகின்றன. தற்போது மதுரையில் இருந்து தேனி வரை ரயில்களை இயக்குவதற்கான ஏற் பாடுகள் தயார் நிலையில் உள் ளன. ஆனால், 11 ஆண்டுகளாக தண்டவாளங்கள் பெயர்க்கப்பட்டு கிடந்ததால் இப்பாதை பொது மக்கள், வாகனங்கள் செல்லும் சிறுபாதையாக மாறி விட்டது.
கண்காணிப்பு, பயன்பாடு இன்றி பலரும் தண்டவாளம் இருந்த பகுதிக்கு மிக அருகில் விளை நிலங்களை விஸ்தரிப்பு செய்து விட்டனர். அதில் கரும்பு, வாழை, வெங்காயம், காய்கறிப் பயிர்களை பயிரிட்டு ரயில்வே இடத்தை தோட்டப் பகுதிகளாக மாற்றி உள்ளனர். குறிப்பாக, தேனியில் இருந்து போடி வரையிலான வாழையாத்துப்பட்டி, ஆதிபட்டி, மஞ்சிநாயக்கன்பட்டி, பூதிப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் இது போன்று ஆக்கிரமிப்புகள் உள்ளன.
இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: தண்டவாளம் அமைப்பதில் தாமதம் ஏற்பட்டதால் விவசாயப் பகுதிகளாக மாற்றி வைத்துள்ளனர். தற்போது ரயில்வே இடம் அளவீடு செய்யப்பட்டு, அதற்கான எல்லைக்கற்கள் ஊன்றப்பட்டு வருகின்றன. வரும் காலங்களில் இந்த இடத்தில் விவ சாயம் செய்யத் தடை விதிக்கப் பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.