கும்பகோணம் மகாமகப் பெருவிழா பாதுகாப்புப் பணிக்காக 83 இடங்களில் காவல் உதவி மையங் கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
தஞ்சாவூர் மாவட்டம் கும்ப கோணத்தில் வரும் 13-ம் தேதி மகாமகப் பெருவிழா தொடங்கு கிறது. முக்கிய நிகழ்வான தீர்த்த வாரி 22-ம் தேதி நடைபெறுகிறது. இந்த விழாவில் 40 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, பக்தர்களின் பாதுகாப்புக்காக போலீஸார் பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
மகாமக விழாவையொட்டி 25 எஸ்.பிக்கள் மேற்பார்வையில், 21 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர். கும்பகோணம் நகரம் முழுவதும் 213 கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்படுகின்றன.
மேலும், போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பிரிவு அமைக் கப்பட்டு, 24 மணி நேரமும் சுழற்சி முறையில் போலீஸார் பணியில் ஈடுபடுகின்றனர். முக்கிய மான 83 இடங்களில் காவல் உதவி மையங்கள் புதிதாக அமைக் கப்பட்டு வருகின்றன. இவற்றில் சப்-இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீஸார் பணியில் ஈடுபடவுள்ளனர்.
மகாமக குளத்தின் தென்கரை யில் உள்ள திருமண மண்டபத்தில் ‘மாஸ்டர் கன்ட்ரோல் ரூம்’ அமைக்கப்பட்டு, நகரம் முழுவதும் போலீஸாரின் கண்காணிப்புக்கு கீழ் கொண்டுவரப்படுகிறது.
36 தற்காலிக காவல் நிலையம்
கும்பகோணம் நகரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 36 தற்காலிக காவல் நிலையங் களும் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு தற்போதே பணியைத் தொடங்கிவிட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்காலிக காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ள பகுதிகள்:
கும்பகோணம் மகாமகக் குளம், ஜெகந்நாத பிள்ளையார் கோயில், மாதுளம்பேட்டை, மோதிலால் தெரு, நாகேஸ்வரன் கோயில், பிரம்மன் கோயில், துவரங்குறிச்சி, பேட்டைத் தெரு, பாலக்கரை, மேலக்காவிரி, சீனிவாசா நகர், காந்தி நகர், நகராட்சி அலுவலகம், பெசன்ட்ரோடு, சங்கரமடம், யானையடி பள்ளி, காமாட்சி ஜோசியர் தெரு, ஆழ்வார் கோயில் தெரு, திருவள்ளுவர் நகர், காமராஜ் நகர்,மேட்டுத் தெரு, மேலக்கொட்டையூர், வட்டிப்பிள்ளையார் கோயில், ஏரகரம் வழிநடப்பு, சாக்கோட்டை, சத்திரம் கருப்பூர், தாராசுரம், பட்டீஸ்வரம், திருப்புறம்பியம், சுவாமிமலை, அண்ணலக்ரஹாரம், திருப்பனந்தாள், திருவிடை மருதூர், ஒப்பிலியப்பன் கோயில், பாபநாசம், வலங்கைமான்.
இவற்றில் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர், ஸ்பெஷல் பிராஞ்ச் காவலர், எழுத்தர் மற்றும் 9 காவலர்கள் பணியில் ஈடுபட உள்ளனர்.
12 காவல் நிலையங்களுக்கு ஒரு டிஎஸ்பி வீதம் 36 காவல் நிலையங்களுக்கு 3 டிஎஸ்பிக் களும், 36 இன்ஸ்பெக்டர்கள், 36 சப்-இன்ஸ்பெக்டர்கள், 36 ஸ்பெஷல் பிராஞ்ச் காவலர்கள், 36 எழுத்தர்கள் மற்றும் 324 போலீஸார் பணியில் ஈடுபடுகின்றனர்.