தமிழகம்

ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் தேர்தலை எதிர்க்க முடிவு

செய்திப்பிரிவு

ஜல்லிக்கட்டு நடைபெறாததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வரும் சட்டப்பேரவை தேர்தலில் நிலைமைக்கு ஏற்ப புறக்கணிப்பு, 49ஓ-வுக்கு வாக்களிப்பது, தனியாக வேட்பாளரை நிறுத்துவது, உண்ணாவிரதம் என பல்வேறு கட்டமாக தங்கள் எதிர்ப்புகளை பதிவு செய்வோம் என வீர விளையாட்டு மீட்புக் கழக மாநிலத் தலைவர் ராஜேஷ் தெரிவித்தார்.

ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட் டுள்ள தடையால் தேர்தலில் எத் தகைய நிலையை மேற்கொள் வது என ஜல்லிக்கட்டு ஆர்வலர் கள் மதுரையில் நேற்று ஆலோ சனை நடத்தினர். பின்னர் செய்தி யாளர்களிடம் வீர விளையாட்டு மீட்புக் கழக மாநிலத் தலைவர் ராஜேஷ் கூறியது:

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு 2-ம் ஆண்டாக நடைபெறவில்லை. இந்த சதியின் பின்னணியில் பீட்டா, விலங்குகள் நல அமைப்பு உள்ளன. மத்திய அரசு ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும் என்ற உண்மையான எண்ணத்துடன் அரசாணை வெளியிடவில்லை. இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றபோது ரூ.1.50 கோடியை பீட்டா செலவு செய்து 11 மூத்த வழக்கறிஞர்களை வைத்து வாதாடியது. ஜல்லிக் கட்டுக்கு ஆதரவாக வாதாட எந்த உதவியும் அரசு வழங்கவில்லை.

கெயில் நிறுவன வழக்கில் உடனே மறு சீராய்வு மனுவை தாக்கல் செய்த தமிழக அரசு, ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கில் மட்டும் வேகத்தைக் காட்டவில்லை. ஜல்லிக்கட்டு நடைபெறாததால் பல கிராமங்களில் பாரம்பரிய கலாசாரத் திருவிழாக்கள் நின்றுபோயின. இதனால் பல வழிகளில் கடும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

தேர்தலில் எத்தகைய அணுகுமுறையை பின்பற்றுவது என மாவட்டம் வாரியாக ஜல்லிக் கட்டு நடத்தும் சங்கங்கள், ஆர்வலர் களிடம் ஆலோசனை செய்யப்பட் டது. இதில், ஜல்லிக்கட்டு நடைபெறும் மாவட்டங்கள், சுற்றுப் பகுதிகளில் சட்டப் பேரவை தேர் தலை புறக்கணிப்பது, வாக்காளர் அடையாள அட்டைகளை மாவட்ட ஆட்சியர்களிடம் தேர்தலுக்கு முன்னதாக ஒப்படைப்பது, மதுரை அல்லது திருச்சியில் தொடர் உண்ணாவிரதம் இருப்பது, ஜல்லிக்கட்டு காளைகளை விலங்குகள் நல வாரிய அலுவலகங்கள், நிர்வாகிகளின் இல்லங்களில் சேர்ப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் நெருங்கும்போது சூழ்நிலைக்கு ஏற்ப ஜல்லிக்கட்டு சங்கங்கள் சார்பில் தனியாக வேட்பாளர்களை போட்டியிடச் செய்வது, வாக்களிக்கும் நிலை ஏற்பட்டால் எந்தக் கட்சிக்கும் ஆதரவு வழங்காமல் 49ஓ-வுக்கு வாக்களிப்போம்.

தேர்தல் அறிக்கையில் ஜல்லிக்கட்டை நடத்துவோம் என்ற வாக்குறுதியை அளித்தால் அக்கட்சிக்கு ஆதரவளிப்போம். நம்பிக்கை துரோகம் செய்த பா.ஜ.க. மற்றும் இதனுடன் கூட்டணி சேரும் கட்சிகளை புறக்கணிப்போம் என்றார்.

SCROLL FOR NEXT