தமிழகம்

மமக கூட்டணி 26-ம் தேதி அறிவிப்பு

செய்திப்பிரிவு

சட்டப்பேரவைத் தேர்தல் கூட்டணி குறித்து வரும் 26-ம் தேதி அறிவிப்போம் என்று மனிதநேய மக்கள் கட்சி பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி கூறினார்.

நாகை மாவட்டம் நாகூரில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: சென்னையில் வரும் 26-ம் தேதி நடைபெற உள்ள தலைமை செயற்குழுக் கூட்டத்தில், சட்டப்பேரவைத் தேர்தல் கூட்டணி குறித்து அறிவிப்போம். தமிழகத்தில் மமக வலுவாக உள்ள 25 தொகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன. அந்தப் பட்டியல் கூட்டணி கட்சியிடம் வழங்கப்பட்டு, அதில் இருந்து தேவையான தொகுதிகளை கேட்டுப் பெறுவோம்.

கோவையில் என் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், புகார் கொடுத்த எங்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும், கட்சி நிர்வாகிகள் 3 பேரைக் கைது செய்துள்ளனர். போலீஸார் நடுநிலையாகச் செயல்படாததை கண்டிக்கிறோம் என்றார்.

SCROLL FOR NEXT