திவ்யா 
தமிழகம்

வலைதளங்களில் ஆபாச பதிவு: தஞ்சை பெண் யூ-டியூபர் கைது

செய்திப்பிரிவு

தேனி யூ-டியூபர் குறித்து வலை தளத்தில் ஆபாச பதிவை வெளி யிட்ட தஞ்சையைச் சேர்ந்த பெண் யூ-டியூபரை தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.

தேனி அருகே நாகலாபுரத்தைச் சேர்ந்தவர் சுகந்தி (35). இவரும், இவரது அக்கா நாகஜோதியும் யூ-டியூப் வலைதளங்களில் பல்வேறு பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம், மருங்குளத்தைச் சேர்ந்த யூ-டியூபர் திவ்யா (30) என்பவர், சுகந்தி குறித்து வலைதளங்களில் ஆபாச பதிவுகளை வெளியிட்டதாகக் கூறப்படுகிறது. இது குறித்து சுகந்தி கடந்த மாதம் 14-ம் தேதி தேனி சைபர் கிரைம் போலீஸில் புகார் செய்தார்.

இதன் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் அரங்கநாயகி தலைமையிலான தனிப்படையினர் திவ்யாவை தேடி வந்தனர்.

இந்நிலையில் நாகூரில் திவ்யாவை கைது செய்த தனிப்படை போலீஸார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் நிலக்கோட்டை சிறையில் அடைத்தனர்.

SCROLL FOR NEXT