தமிழகம்

உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணியில் விசிக: திருமாவளவன் திட்டவட்டம்

செய்திப்பிரிவு

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் நேற்று காரைக்குடியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மத்தியில் கூட்டாட்சி தத்துவத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். அதிகாரம் ஒரே இடத்தில் குவியக் கூடாது என்ற கருத்து, தற்போது தென் மாநிலங்களில் ஒலிக்கத் தொடங்கியுள்ளது.

உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணியில் விசிக இருக்கும். நீட் தேர்வு பயத்தில் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது வருத்தத்தைதருகிறது. இதற்கு மோடி அரசு பொறுப்பேற்க வேண்டும். நீட் தேர்வுக்கு எதிரான மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் தர வேண்டும். தமிழக மாணவர்களை காப்பாற்ற மோடி அரசு முன்வர வேண்டும். இல்லையென்றால் ஜல்லிக்கட்டுப் போராட்டம் போன்று மிகப்பெரிய அறப்போராட்டம் நடைபெறும் என்றார்.

SCROLL FOR NEXT