தமிழகம்

தொழில்துறையில் ரூ.2 லட்சத்து 42 ஆயிரம் கோடி முதலீடுகளை ஈர்க்க வழிவகை

செய்திப்பிரிவு

உலக முதலீட்டாளர் மாநாட்டின் மூலம் 4 லட்சத்து 70 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கக்கூடிய வகையில் ரூ.2 லட்சத்து 42 ஆயிரம் கோடி அளவில் தொழில் முதலீடுகளை ஈர்க்க வழிவகை செய்யப்பட்டுள்ளதாக இடைக்கால பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இடைக்கால பட்ஜெட்டில் மேலும் கூறியிருப்ப தாவது:

கோயம்புத்தூரில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் ரூ.55 கோடியில் தமிழ்நாடு உயிரி தொழில் பூங்கா-3 (டைசல்) அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டத் தில் ரூ.700 கோடியில் கனரகத் தொழில் உதிரிப் பாகங்கள் உற் பத்தி செய்யும் மையத்தையும், வயலூரில் ரூ.264 கோடியில் பாலிமர் தொழிற் பூங்காவையும் அமைக்க அனுமதி அளிக்கப் பட்டுள்ளது.

கடந்த 5 ஆண்டுகளில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் துறையில் ரூ.91 ஆயிரத்து 210 கோடியில் புதிய முதலீடுகள் கிடைத்துள்ளன. உலக முதலீட் டாளர் மாநாட்டின்போது இத்துறை யில் முதலீடு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளவர்களில், ரூ.1,529 கோடியே 88 லட்சம் முதலீட்டில் ஆயிரத்து 458 தொழில் முனைவோர் இதுவரை உற்பத்தியைத் தொடங்கியுள்ளனர்.

முதல் தலைமுறை தொழில் முனைவோரை ஊக்குவிப்பதற் காக புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் மேம்பாட்டுத் திட்டம் என்ற புதிய திட்டத்தின் கீழ் இதுவரை ரூ.737 கோடியே 45 லட்சத்தில் ஆயிரத்து 586 திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு இடைக்கால பட்ஜெட்டில் கூறப்பட்டிருக்கிறது.

SCROLL FOR NEXT