தமிழகம்

ஆசிரியர்களின் போராட்டத்துக்கு மக்கள் நலக் கூட்டணி ஆதரவு

செய்திப்பிரிவு

ஆசிரியர்களின் போராட்டத்துக்கு மக்கள் நலக் கூட்டணி ஆதரவு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மக்கள் நலக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஆகியோர் நேற்று கூட்டாக வெளியிட்ட அறிக்கை:

மத்திய அரசுப் பள்ளி ஆசிரியர் களுக்கு இணையான ஊதியம் வழங்க வலியுறுத்தி அனைத்து ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (ஜேக்டோ) கடந்த 3 நாட்களாக தமிழகம் முழுவதும் போராட்டங்களை நடத்தி வருகிறது. மக்கள் நலக் கூட்டணியின் குறைந்தபட்ச செயல்திட்டத்தில் ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற உறுதி அளித்துள்ளோம்.

ஆசிரியர்களின் மிக முக்கிய மான கோரிக்கை தன் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் (சிபிஎஸ்) ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைத்தப்பட வேண்டும் என்பதாகும். இதுவும் மக்கள் நலக் கூட்டணியின் குறைந்த பட்ச செயல்திட்டத்தில் உள்ளது.

இந்த திட்டம் கொண்டு வரப்பட்ட போது மத்திய அரசில் அங்கம் வகித்த திமுக இதில் முக்கியப் பங்காற்றியது. இதை தமிழகத்தில் நடைமுறைப்படுத்தியவர் ஜெய லலிதா. சிபிஎஸ் திட்டம் அமலான பிறகு பல ஆண்டுகள் கருணாநிதி முதல்வராக இருந்தபோது இப்பிரச்சினையை தீர்க்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அதிமுக, திமுக இரு கட்சிகளும் தேர்தலுக்கு முன்பாக பொய்யான வாக்குறுதிகள் கொடுப்பதும், ஆட் சிக்கு வந்ததும் மறப்பதும் வாடிக்கை யாக உள்ளது. மக்கள் நலக் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஆசிரியர்களின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன் விடுத்துள்ள அறிக்கையில், ‘ஊதிய உயர்வு உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலி யுறுத்தி 2 லட்சத்துக்கும் அதிக மான ஆசிரியர்கள் போராடி வரு கின்றனர். பள்ளி இறுதித் தேர்வு நெருங்குவதால் மாணவர்களின் நலனை கருத்தில்கொண்டு ஆசிரி யர் சங்கப் பிரதிநிதிகளுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தி பிரச் சினைக்கு சுமூகத் தீர்வு காண வேண்டும்’ என கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT