தமிழகம்

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பாஜக தனித்துப் போட்டி? - அண்ணாமலை பதில்

ந.முருகவேல்

உள்ளாட்சி தேர்தலில் கூட்டணியா அல்லது தனித்தா? என்பது குறித்து இரு தினங்களில் அறிவிக்கப்படும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சட்டப் பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற பாமக, 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது

இந்த நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் பணிக் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் கலந்தாலோசிப்பதற்காக இன்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நெய்வேலியில் இருந்து கள்ளக்குறிச்சி சென்றார்.

அப்போது அவரிடம் அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றிருந்த பாமக, 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக அறிவித்திருக்கிறது. அதே அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் பாஜக நிலை என்ன என்பது குறித்து அவரிடம் கேட்கப்பட்டது.

அதற்கு அண்ணமலை ”அதுகுறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்துவிட்டு இரு தினங்களில் கூட்டணியா அல்லது தனித்தா என்பது பற்றி அறிவிக்கப்படும்” என்று பதிலளித்தார்.

SCROLL FOR NEXT