தமிழக ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோஹித், நேற்றுவிடைபெற்று பஞ்சாப் புறப்பட்டுச் சென்றார். புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி, வரும் 18-ம் தேதி பதவியேற்க உள்ளார்.
தமிழக ஆளுநராக கடந்த 2017அக்டோபரில் பன்வாரிலால் புரோஹித் பதவியேற்றார். 4 ஆண்டுகள் ஆளுநராக இருந்த நிலையில், கடந்த செப்.10-ம் தேதி பஞ்சாப் ஆளுநராக அவர் நியமிக்கப்பட்டார். நேற்று முன்தினம் முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி ஆகியோர் அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
இதையடுத்து, நேற்று அவர் பஞ்சாப் புறப்பட்டுச் சென்றார். விமான நிலையத்தில் அமைச்சர் துரைமுருகன் அவரை வழியனுப்பிவைத்தார். அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, பொன்முடி, எ.வ.வேலு, தலைமைச் செயலர் இறையன்பு, டிஜிபி சைலேந்திரபாபு உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
தமிழகத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ரவீந்திர நாராயண ரவி, நாகாலாந்தில் இருந்துவரும்16-ம் தேதி இரவு சென்னைவருகிறார். ஆளுநர் மாளிகையில்தமிழகத்தின் 25-வது ஆளுநராகஅவருக்கு உயர் நீதிமன்ற தலைமைநீதிபதி 18-ம் தேதி பதவிப் பிரமாணம் செய்துவைக்கிறார்.