தமிழகம்

போலி ஆவணங்கள் கொடுத்து வரி மோசடி; 100-க்கும் மேற்பட்ட இடங்களில் வணிக வரித் துறை சோதனை: நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க முடிவு

செய்திப்பிரிவு

தமிழகம் முழுவதும் ஜவுளி நிறுவனங்கள் உட்பட 100-க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் வணிக வரித் துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.

தமிழகத்தில் தொழில் செய்யும் நிறுவனங்கள் அனைத்தும் வணிக வரி கட்ட வேண்டும். வணிக வரிகட்டுவதில் போலியான ஆவணங்களை தாக்கல் செய்து பல நிறுவனங்கள் மோசடி செய்ததாக வணிக வரித்துறைக்கு புகார்கள் வந்தன. இதனால் அரசுக்கு பலகோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாகவும் கூறப்பட்டன.

சென்னையில் 35 இடங்கள்

அதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் வணிக வரித் துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். சென்னையில் 35 இடங்கள், நெல்லையில் 15 இடங்கள், கோவை, மதுரையில் தலா 13இடங்களில் இந்த சோதனைகள் நடைபெற்றன. பிரபல ஜவுளி நிறுவனங்கள் இந்த சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

விற்பனை மற்றும் கொள்முதலை குறைத்துக் காட்டி, போலியான ஆவணங்களை தயாரித்து வணிக வரித் துறையில் தாக்கல் செய்து, குறைவான வரியை கட்டியதாக இந்த நிறுவனங்கள் மீது புகார்கள் வந்தன.

அந்த புகார்களின்பேரிலும், தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்யும்போது, அவை பொய்யான ஆவணங்கள் என்பதை கண்டுபிடித்து,அதன் அடிப்படையிலும் நேற்றுசோதனைகள் நடைபெற்றன.

இந்த சோதனையின் முடிவில்பல நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வணிக வரித் துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

SCROLL FOR NEXT