சிதம்பரம் அண்ணாமலை பல் கலைக்கழக வளாகத்தில் மாணவியின் கழுத்தை அறுத்த இளைஞ ருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து, கடலூர் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 27 வயது டைய மாணவி ஒருவர், கடந்த 2018-ம்ஆண்டில் எம்எஸ்சி (வேளாண்மை) இரண்டாம் ஆண்டு படித்து வந் தார். கடந்த 30-4-2018 அன்று அவர் தங்கியிருந்த விடுதியில் இருந்து வெளியே வந்த போது அங்கு நின்றிருந்த இளைஞர் ஒருவரால் கத்தியால் கழுத்தறுக்கப்பட்டார். இதைக் கண்டு அங்கிருந்த சிலர் அந்த இளைஞரை கல்லால் தாக்கினர். அண்ணாமலை நகர்போலீஸார் இருவரையும் மீட்டு,மருத்துவமனையில் அனுமதித்த னர். தொடர் விசாரணையில், மாண வியை கழுத்தறுத்தவர் வேலூர் மாவட்டம் நாட்றம்பள்ளியைச் சேர்ந்த நவீன்குமார் (30) என்பது தெரிய வந்தது. பள்ளி பருவம் முதலே இருவரும் காதலித்து வந்த நிலையில் நவீன்குமார் பொறியியல் முடித்து விட்டு சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அந்த மாணவி, சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் படித்து வந்தார்.அந்த மாணவி சக மாணவர்க ளுடன் பேசுவது நவீன்குமாருக்கு பிடிக்கவில்லை. சம்பவத்தன்று மாணவியை பார்ப்பதற்காக சிதம் பரத்துக்கு நவீன்குமார் வந்திருந்த நிலையில், இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது விஷமருந்திய நவீன் குமார், அந்த மாணவியின் கழுத்தறுத்தது தெரிய வந்தது. இதுகுறித்து அண்ணாமலைநகர் காவல் நிலைய போலீஸார் வழக் குப்பதிவு செய்து, நவீன்குமாரை கைது செய்தனர்.
இந்த வழக்கின் விசாரணை கடலூர் மாவட்ட மகளிர் நீதிமன் றத்தில் நடைபெற்று வந்தது. நீதிபதி பாலகிருஷ்ணன் நேற்று வழக்கில் தீர்ப்பு வழங்கினார். மாணவியை கொலை செய்ய முயன்ற குற்றத்துக்காக நவீன்குமாருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை, ரூ.50 ஆயிரம் அபராதம் மற்றும் மாணவியை ஆபாசமாக பேசிய தற்காக 3 மாதம் சிறை, ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து, அதை ஏககாலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டார். இதையடுத்து நவீன்குமார் கடலூர் மத்திய சிறை யில் அடைக்கப்பட்டார்.
இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞர் க.செல்வபிரியா ஆஜ ரானார்.