தமிழகம்

ப.சிதம்பரத்திடம் வாக்குவாதம் செய்த காங்கிரஸ் நிர்வாகி பதவி பறிப்பு

செய்திப்பிரிவு

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே நடந்த காங்கிரஸார் நிர்வாகிகள் கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திடம் வாக்குவாதம் செய்த நிர்வாகியின் பதவி பறிக்கப்பட்டது.

மானாமதுரை அருகே வெள்ளிக்குறிச்சியில் செப்.11-ம் தேதி காங்கிரஸ் நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டம் நடந்தது. இதில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திடம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பாண்டிவேலு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து பாண்டிவேலுவின் மாவட்ட செயற்குழு பதவி பறிக்கப்பட்டதோடு, அவருக்கு விளக்கம் கேட்டு சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

SCROLL FOR NEXT