தமிழகம்

தமிழகம், புதுச்சேரியில் வழக்கறிஞர்கள் நாளை நீதிமன்ற புறக்கணிப்பு

செய்திப்பிரிவு

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் கூட்டமைப்பின் தலைவர் பரமசிவம் சேலத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கடந்த 2009-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் போலீஸார் அத்துமீறி நுழைந்து வழக்கறிஞர்கள் மற்றும் நீதிபதிகள் மீது தாக்குதல் நடத்தி கட்டிட கண்ணாடிகளை சேதப்படுத்தினர். இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட காவல் துறையினர் மீது தமிழக அரசு இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

இதைக் கண்டித்து, நாளை (19-ம் தேதி) தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 60 ஆயிரம் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT