திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் செய்தியாளர்களிடம் பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று கூறியதாவது:
அதிமுக ஆட்சியில் அனைத்துத் துறைகளும் ஸ்தம்பித்துவிட்டன. ஆட்சி நிர்வாகம் சரியில்லை என்பதற்கு எஸ்விஎஸ் கல்லூரி மாணவிகள் 3 பேர் உயிரிழப்பு எடுத்துக்காட்டு. நடுத்தர மக்கள், தொழிலாளர்கள், அரசு ஊழியர் கள், மீனவ குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள் ளது. அவர்களது நிலையைக் கேட்க அதிமுக அரசு தயாராக இல்லை.
பாமக ஆட்சிக்கு வந்தால் தமிழ கத்தில் ஒரு சொட்டு சாராயம்கூட இருக்காது. மதுவை ஒழித்தால், கள்ளச்சாராயம் பெருகும் என்ற நிலையை பாமக தடுத்து நிறுத்தும். சாராயம் விற்கப்படும் இடத்தின் கிராம நிர்வாக அலுவலர், காவல் துறை உதவி ஆய்வாளர், ஊராட்சி மன்றத் தலைவர் பணி நீக்கம் செய்யப்படுவார்கள்.
234 தொகுதிகளிலும் பாமக தனித்து போட்டியிடும். அந்த துணிச்சல் பாமகவுக்கு மட்டுமே உள்ளது. அதுபோன்ற துணிச்சல் மற்ற கட்சிகளுக்கு இல்லை என்பதால்தான் மற்றவர்களிடம் செல்கின்றனர். திமுக, அதிமுக கட்சிகளுக்கு மாற்று அணியாக பாமக விளங்குகிறது. அன்புமணியை முதல்வராக ஏற்றுக்கொள்ளும் கட்சியை வரவேற்போம் என்றார்.