இரட்டை இலை சின்னத்தை பெற்றுத்தர லஞ்சம், தொழிலதிபருக்கு ஜாமீன் பெற்று தர தொழிலதிபரின் மனைவியிடம் லஞ்சம்உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் இடைத்தரகர் சுகாஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டு டெல்லிதிஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மோசடி புகாரின்பேரில் சுகேஷின் காதலி லீனா மரியாவும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
டெல்லி குற்றப்பிரிவில் சுகேஷ் மீது ஏராளமான மோசடி புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்த விசாரணையில், சுகேஷ் சந்திரசேகரின் நெருங்கிய கூட்டாளிகளான கமலேஷ் கோத்தாரி, அருண் முத்து, சாமுவேல் மற்றும்மோகன்ராஜ் ஆகிய 4 பேரையும் டெல்லி குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர். இவர்கள் 4பேருமே சென்னையை சேர்ந்தவர்கள் என்பதால், 4 பேரையும் சென்னைக்கு அழைத்து டெல்லி குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
இதில் கமலேஷ் கோத்தாரி ஹவாலா இடைத்தரகராக செயல்பட்டு வந்தவர். சட்டவிரோத ஹவாலா பரிமாற்றத்தின் மூலம் சுகேஷ் சந்திரசேகர் சென்னையில் பங்களா வாங்குவதற்கு கமலேஷ் கோத்தாரி உதவி புரிந்ததாக குற்றம்சுமத்தப்பட்டுள்ளது. மோசடி பணத்தின் மூலம் பல்வேறு சொகுசு கார்கள் மற்றும் பங்களாவை வாங்கித் தரும் வேலையையும் கமலேஷ் கோத்தாரி செய்துள்ளார். சுகேஷ் சந்திரசேகர் சிறையில் இருந்தவாறே பல்வேறு ஹவாலா பரிமாற்றங்களை செய்துள்ளார். அதற்கு உடந்தையாக கமலேஷ் கோத்தாரி இருந்ததும் தெரியவந்துள்ளது.
நடிகை லீனா மரியாவின் மேலாளராக பணிபுரிபவர் சாமுவேல். மோசடியில் கிடைத்த பணத்தின் மூலம் சுகேஷ் சந்திரசேகர் மற்றும் லீனா மரியா பால் பல்வேறு சொகுசு கார்களை வாங்குவதற்கு உதவி புரிந்ததாக அருண்முத்து என்பவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மோகன்ராஜ், சுகேஷ் சந்திரசேகரின் வழக்கறிஞர் ஆவார்.
இந்த 4 பேரையும் டெல்லி போலீஸார் கடந்த 10-ம் தேதி சென்னைஅழைத்து வந்தனர். கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சுகேஷின்வீட்டுக்கு அழைத்து சென்று 4 பேரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர், சென்னையில் பல்வேறு இடங்களுக்கும், வங்கிகளுக்கும் அழைத்து சென்று 4 பேரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. சுகேஷ்பணத்தை பதுக்கி வைத்திருக்கும் இடம் குறித்து நேற்று 3-வது நாளாக4 பேரிடமும் சென்னையில் வைத்துவிசாரணை நடத்தப்பட்டது. இன்று4-வது நாளும் சென்னையில்வைத்து விசாரணை நடத்த இருப்பதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.