தமிழகம்

ஐபிஎஸ் பயிற்சி முடித்த 9 பேருக்கு பணியிட ஒதுக்கீடு

செய்திப்பிரிவு

ஐபிஎஸ் பயிற்சி முடித்த 9 பேருக்கு பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஐபிஎஸ் முடித்த சந்தீஷ், சதுர்வேதி, அங்கிட் ஜெயின், சாய் பிரனீத், அபிஷேக் குப்தா, அருண் கபிலன், கவுதம் கோயல், ஸ்ரேயா குப்தா,அர்விந்த் ஆகிய 9 பேருக்கு முறையே, தூத்துக்குடி, நாங்குநேரி, விருத்தாசலம், திருத்தணி, திண்டிவனம், திண்டுக்கல், பெருந்துறை, உத்தமபாளையம், ஓசூர் ஆகிய இடங்களில் காவல் கூடுதல் கண்காணிப்பாளராக பணியிடம்ஒதுக்கப்பட்டுள்ளது.

அதிகாரிகள் பணியிட மாற்றம்

சென்னை போக்குவரத்துப் பிரிவு (கிழக்கு) துணை ஆணையர் பாலகிருஷ்ணன், திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

திருப்பத்தூர் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி, சென்னை சைபர் க்ரைம் பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை சைபர் க்ரைம் பிரிவு கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா, சென்னை போக்குவரத்துப் பிரிவு (கிழக்கு) துணை ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை உள்துறை முதன்மைச் செயலர்எஸ்.கே.பிரபாகர் பிறப்பித்துள்ளார்.

SCROLL FOR NEXT