தமிழகம்

ஸ்ரீபெரும்புதூரில் 100 படுக்கைகளுடன் இஎஸ்ஐ மருத்துவமனை அமைக்கப்படும்: மத்திய அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா தகவல்

செய்திப்பிரிவு

தமிழக அரசு நில உரிமை மாற் றம் செய்து கொடுத்தால், ஸ்ரீபெரும் புதூரில் 100 படுக்கைகளுடன் கூடிய இஎஸ்ஐ மருத்துவமனை ஏற்படுத்தப்படும் என்று மத்திய இணையமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா தெரிவித்துள்ளார்.

மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை இணைய மைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா நேற்று ஸ்ரீபெரும்புதூர் எம்பி தொகுதியை பார்வையிட்டார். ஸ்ரீபெரும்புதூர் சிப்காட் தொழில் பேட்டையில் அவர் செய்தியாளர் களிடம் கூறியதாவது:

இந்த சிப்காட் தொழில்பேட்டை யில் 100 படுக்கைகளுடன் கூடிய மருத்துவமனை ஒன்றை அமைக்க இஎஸ்ஐ தயாராக உள்ளது. நிலமும் தேர்வு செய்யப் பட்டுள்ளது.

அந்த நிலத்தை தமிழக அரசு, இஎஸ்ஐக்கு நில உரிமை மாற்றம் செய்துக் கொடுத் தால் இங்கு மருத்துவமனை உடனடியாக அமைக்கப்படும்.

மேலும், தமிழகத்தில் ராணிப் பேட்டை, ஆம்பூர், தாம்பரம், திண்டுக்கல், கோவில்பட்டி, ராஜ பாளையம், விருதுநகர் ஆகிய 7 இடங்களில் செயல்பட்டு வரும் இஎஸ்ஐ மருந்தகங்களை, 30 படுக்கைகளுடன் கூடிய மருத் துவமனைகளாக தரம் உயர்த்த வும் திட்டமிட்டிருக்கிறோம்.

தொழிலாளர் நலன் சார்ந்த 44 சட்டங்களை ஒன்றிணைத்து, 4 சட்டங்களாக குறைக்க திட்ட மிட்டிருக்கிறோம்.

இவ்வாறு பண்டாரு தத்தாத் ரேயா கூறினார்.

SCROLL FOR NEXT