விநாயகர் சதுர்த்தி மற்றும் தொடர் விடுமுறை காரணமாக தங்கள் சொந்த ஊருக்கு செல்ல சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நேற்று குவிந்த பயணிகள் கூட்டம்.படம்: ம.பிரபு 
தமிழகம்

சென்னையில் இருந்து 700 சிறப்பு பேருந்து

செய்திப்பிரிவு

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, 3 நாட்கள் விடுமுறை வருவதால், சென்னையில் இருந்து நேற்று ஏராளமான மக்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் சென்றனர். மக்களின் வசதிக்காக 700 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

சென்னையில் கோயம்பேடு, பெருங்களத்தூர், தாம்பரம் பேருந்து நிலையங்களில் கூட்டம்அதிகமாக இருந்தது.சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களிலும் கூட்டம் சற்று அதிகம் இருந்தது.

இதுதொடர்பாக போக்குவரத்து கழக உயர் அதிகாரிகளிடம் கேட்ட போது, ‘‘நேற்று ஒரே நாளில் 1.50 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றுள்ளனர். விடுமுறை முடிந்து மக்கள் சென்னைக்கு திரும்பி வர வசதியாக போதிய அளவில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்’’ என்றனர்.

SCROLL FOR NEXT