தமிழகம்

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாகிறது

செய்திப்பிரிவு

வடக்கு, மத்திய வங்கக்கடலில் 11-ம் தேதி (நாளை) புதிதாக குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக உள்ளது.

இதனால் தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் செப்.13வரை மிதமான மழை பெய்யும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

தென்மேற்கு பருவக்காற்றின் தாக்கத்தால் 13-ம் தேதி நீலகிரி,கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

இத்தகவலை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT