தமிழகம்

இணைய வகுப்பில் ஆபாச படம்: ஆசிரியர் இடமாற்றம்

செய்திப்பிரிவு

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே வடுகம் பகுதி அரசு மேல் நிலைப்பள்ளியில் இயற்பியல் ஆசிரியராக எடின்பரோ கோமகன் (54) என்பவர் பணிபுரிந்தார். இவர் கடந்த 2-ம் தேதி ஆன்லைனில் பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது திடீரென ஆபாச படம் வெளியாகியுள்ளது.

இதை அறிந்த மாணவியரின் பெற்றோர் நாமகிரிப்பேட்டை போலீஸில் புகார் செய்தனர். இதுகுறித்து கல்வித் துறை அதிகாரிகளும் விசாரித்தனர். இந்நிலையில் எடின்பரோ கோமகனை மங்களபுரம் அரசு மேல்நிலைபள்ளிக்கு மாற்றம் செய்து முதன்மைக் கல்வி அலுவலர் பாலமுத்து உத்தரவிட்டார்.

SCROLL FOR NEXT