மதுரையில் சாலைகளை விரிவு படுத்தவும், மேம்பாலம் கட்டவும் தவறியதால் முகூர்த்த நாளான நேற்று நகரின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
முகூர்த்த தினமான நேற்று மதுரையில் உள்ள முக்கிய மண்டபங்களில் திருமணம் உள் ளிட்ட பல்வேறு சுப நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
பெரும்பாலான திருமண மண்டபங்களில் வாகனங்களை நிறுத்த வசதியில்லை. அதனால், நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் அந்தந்த மண்டபங்கள் அமைந்திருக்கும் சாலையிலேயே தங்கள் வாக னங்களை நிறுத்தினர்.
அளவுக்கு அதிகமான வாகனங்களால் மாட்டுத்தாவணி மேலூர் சாலை, அழகர்கோவில் சாலை, கோரிப்பாளையம், சிம்மக்கல், பெரியார் பஸ் நிலையம் உட்பட பல்வேறு பகுதிகளில் நேற்று போக்குவரத்து ஸ்தம்பித்தது. மாட்டுத்தாவணி பகுதியில் நேற்று பிற்பகல் 1.30 மணி முதல் 2.30 மணி வரை வாகனங்கள் நெரிசலில் தத்தளித்தன. மதுரையில் கடந்த 5 ஆண்டுகளில் கனரக வாகனங்கள், கார்கள், ஆட்டோக்கள், இரு சக்கர வாகனங்கள் எண்ணிக்கை அதி கரித்துள்ளன.
ஆனால் நகரில் உள்ள மாநில நெடுஞ்சாலைகள், மாநகராட்சி சாலைகளை காலத்துக்கு ஏற் றவாறு விரிவுபடுத்தவோ, மேம்பாலங்களை கட்டவோ மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால், விழாக் காலங்களில் மட்டுமின்றி முகூர்த்த நாட்கள், சாதாரண நாட்களில்கூட நகர சாலைகளில் போக்குவரத்து ஸ்தம்பித்து வருகிறது.
போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு காண மதுரை மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட் டுநர்கள் எதிர்பார்க்கின்றனர்.