சிபிஐ முன்னாள் இயக்குநர் விஜயராம ராவ். இவரது மகன் ஸ்ரீனிவாச கல்யாண் ராவ். இவர் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள நிறுவனம் ஒன்றின் நிர்வாக இயக்கு நராக உள்ளார். சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா, ஆந்திரா வங்கி, கார்ப்பரேசன் வங்கியில் மொத் தம் ரூ.304 கோடி கடன் வாங்கியுள் ளார். ஆனால் கடனை குறிப்பிட்ட தவணையில் திரும்பச் செலுத்த வில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து, வங்கி அதிகாரிகள் சிபிஐயில் புகார் அளித்தனர். அந்த புகாரின்படி சிபிஐ அதி காரிகள் சென்னை மற்றும் ஹைத ராபாத்தில் உள்ள ஸ்ரீனிவாச கல் யாண் ராவ் வீடுகள், அலுவலகங் களில் சோதனை நடத்தினர்.
சோதனையில் ஏராளமான ஆவ ணங்களை கைப்பற்றியுள்ளனர். மேலும் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ள சிபிஐ அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.