காரைக்குடியில் அடுத்தடுத்து கொள்ளை சம்பவங்கள் நடந்து வருவதால் மக்கள் அச்ச மடைந்துள்ளனர். கடந்த 2 மாதங் களில் 100 பவுன் நகைகள் திருடு போயுள்ளன.
காரைக்குடி கண்ணுப்பிள்ளை தெருவைச் சேர்ந்த தம்பதி ராஜேந்திரன் (68), சந்திரா (58). இவர்கள் நேற்று அதிகாலை உறவினர் வீட்டு விசேஷத்துக்காக அப்பகுதியில் நடந்து சென்றனர். மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர், அவர்களை தாக்கிவிட்டு சந்திரா அணிந்திருந்த தாலி செயின் உட்பட 14 பவுன் நகைகளை பறித்துச் சென்றனர். இதுகுறித்து காரைக்குடி வடக்கு போலீஸார் விசாரிக்கின்றனர்.
இதேபோல் காரைக்குடி பகு தியில் தொடர்ந்து வழிப்பறி, கொள்ளை நடந்து வருவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். கடந்த ஜூலையில் காரைக்குடி அருகே கண்டனூரில் ஓய்வு பெற்ற வங்கி ஊழியர், அவரது மனைவியை கட்டிப்போட்டு 50 பவுன் நகைகள் கொள்ளை யடிக்கப்பட்டது.
கடந்த ஆகஸ்டில் காரைக்குடி வள்ளுவர் நகர் மீனாள் என்பவர் வீட்டில் நுழைந்த முகமூடி கொள்ளையர்கள் 6 பவுன் நகைகளை கொள்ளை யடித்துவிட்டுச் சென்றனர். குறிஞ்சி நகரைச் சேர்ந்த எரிவாயு முகவர் மதியழகன் வீட்டில் பின்பக்க கத வை உடைத்து ரூ.6 லட்சத்தை திருடி சென்றனர்.
பெரியார் நகர் 6-வது விஸ் தரிப்பு பகுதியைச் சேர்ந்த முகமதுஅலி வீட்டில் பூட்டை உடைத்து 6 பவுன் நகைகளை திருடிச் சென்றனர். ராம்நகர் பாரதி தெருவைச் சேர்ந்த துரைராஜ் வீட்டில் 25 பவுன் நகைகள், ரூ.2 லட்சம் கொள்ளையடிக்கப் பட்டது. சுப்ரமணியபுரம் 10-வது வீதியைச் சேர்ந்த சசிசவுந்தரம் கடைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு நடந்து வந்தபோது 5 பவுன் வழிப்பறி செய்தனர். கோட்டையூர் காட்டூரணியைச் சேர்ந்த சுந்தரம் வீட்டில் பூட்டை உடைத்து 12 பவுன் நகைகளை திருடிச் சென்றனர்.
காரைக்குடி மற்றும் சுற்று வட்டாரத்தில் கடந்த 2 மாதங்களில் 10-க்கும் மேற்பட்ட கொள்ளை சம்பவங்கள் நடந்துள்ளன. இதில் பல வழக்குகளில் திருடர்களை பிடிக்க முடியாமல் போலீஸார் திணறி வருகின்றனர்.
தற்போது நகரில் 100-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் உள்ளன. எனினும், குற்றவாளி களை பிடிக்க முடியாதநிலை உள்ளது. கடந்த காலங்களில் குற்றப்பிரிவுகளில் அனுபவம் வாய்ந்த போலீஸார் நியமித்து வந்தனர். ஆனால் தற்போது அந்தநிலை மாறிவிட்டது. மேலும் குற்றப்பிரிவு போலீஸாருக்கு வேறு பணிகளும் கொடுப்பதால் குற்றவாளிகள் குறித்த தகவல்களை சேகரிக்க முடியாமல் போகிறது. இதனால் கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இதனை தடுக்க மாவட்ட எஸ்பி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.