தமிழகத்தில் 2 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த மே 7 அன்று, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவியேற்றது. இதையடுத்து, முக்கிய ஐபிஎஸ், ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்தும், காலியாக உள்ள இடங்களில் அதிகாரிகளை நியமித்தும் தமிழக அரசு அவ்வப்போது உத்தரவிட்டு வருகிறது. அதன்படி இன்று (செப். 08) 2 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு இன்று வெளியிட்ட அறிவிப்பு:
"1. ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியராக பதவி வகித்துவரும் ஏ.ஆர்.கிளாட்ஸ்டன் புஷ்பராஜ், மாநில திட்டக் கமிஷன் உறுப்பினர் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
2. மாநில திட்டக் கமிஷன் உறுப்பினர் செயலாளராக பதவி வகித்துவரும் டி.பாஸ்கர பாண்டியன், ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்".
இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.