தமிழகம்

நினைவாற்றல் கலையுடன் திருக்குறளை இணைத்து பயிற்சி: வரிசை எண் கூறினால் திருக்குறளை கூறும் குழந்தைகள்

ச.கார்த்திகேயன்

நினைவாற்றல் கலையுடன் திருக் குறளை இணைத்து திருக்குறள் எல்லப்பன் என்பவர் பயிற்சி அளித்து வருகிறார். அவரிடம் பயிற்சி பெற்ற குழந்தைகள் குறளின் வரிசை எண்ணை தெரி வித்தால், உடனே குறளை கூறுவ துடன், 1330 குறள்களையும் ஒப் பித்து, அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி வருகின்றனர்.

உலகத் தமிழாராய்ச்சி நிறுவ னம் சார்பில் முதல்வர் ஜெயலலி தாவின் 68-வது பிறந்தநாளை ஒட்டி ‘தமிழ்த்தாய் 68’ என்ற விழா பிப்ரவரி 1-ம் தேதி தொடங்கியது. இவ்விழா 29-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இவ்விழாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடை பெற்ற நிகழ்வில் முன்னாள் தமிழ் வளர்ச்சித் துறை செயலரும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையக் குழு உறுப் பினருமான மூ.ராசாராம் எழுதிய திருக்குறள் தொடர்பான 5 நூல்கள் வெளியிடப்பட்டன.

அந்த விழாவில் ராசாராம் ஏற்புரை வழங்கும்போது, பல இடங்களில் திருக்குறளின் பெரு மைகளை கூறும் விதமாக, பல குறள்களை மேற்கோள் காட்டி பேசினார். அப்போது ஒவ்வொரு குறளைத் தொடங்கும்போதும், அந்த விழாவில் பங்கேற்ற 10 வயதுக்கு உட்பட்ட 50-க்கும் மேற்பட்ட குழந்தைகள் அந்த திருக்குறளை கூறினர்.

இந்த கலையை எப்படி கற்றீர் கள் என்று அந்த குழந்தைகளிடம் கேட்டபோது, செங்கல்பட்டில் உள்ள திருக்குறள் எல்லப்பனிடம் கற்றதாக கூறினர். பின்னர் திருக் குறள் எல்லப்பன், விருந்தினர்கள் முன்னிலையில், திருக்குறள் வரிசை எண்ணை கூறியபோது, குழந்தைகள் அதற்கான திருக் குறளை ஒப்பித்தனர். தொடங்கும் வார்த்தை, முடியும் வார்த்தைகளை கூறினாலும், அதற்குரிய குறளை ஒப்பித்தனர்.

அதைப் பார்த்து, ராசாராம், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் இ.சுந் தரமூர்த்தி, உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் கோ.விசய ராகவன் ஆகியோர் வியந்தனர்.

இது தொடர்பாக திருக்குறள் எல்லப்பனிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:

நான் 8 உதவியாளர்களை வைத் துக்கொண்டு, செங்கல்பட்டு, அரக் கோணம், திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் நினைவாற்றல் கலை பயிற்சி வகுப்புகள் நடத்தி வருகி றேன். அபாகஸ் எனும் முறை யில் கணிதம் மட்டுமே கற்றுத் தரப்படுகிறது. எனது முறையில், நினைவாற்றல் கலை பயிற்சியுடன், திருக்குறளை இணைத்து பயிற்சி அளித்து வருகிறேன்.

தற்போது 10 வயதுக்கு உட் பட்ட 50-க்கும் மேற்பட்ட குழந்தை களுக்கு பயிற்சி அளித்து வரு கிறேன். என்னிடம் பயிற்சி பெற்ற 70 குழந்தைகள், திருக்குறளில் இடம்பெற்றுள்ள 1330 குறள் களையும் ஒப்பித்து, தமிழ் வளர்ச்சித் துறை வழங்கும் ரூ.10 ஆயிரம் பரிசை வென்றுள்ளனர். பயிற்சி முடித்த குழந்தைகளுடன், 1330 குறள்களையும் ஒப்பிக்கும் திருக்குறள் முற்றோதல் நிகழ்வு களையும் நடத்தி வருகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT