கவிஞர் புலமைப்பித்தன் (85) உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் நேற்று காலை மருத்துவமனைக்கு வந்த சசிகலா, புலமைப்பித்தனின் உடல்நிலை குறித்து மருத்துவர் சஞ்சீவ் அகர்வாலிடமும், புலமைப்பித்தனின் பேரன் திலீபனிடமும் விசாரித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, “எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் அரசவைக் கவிஞராகவும், அவைத் தலைவராகவும் இருந்தார். புலமைப்பித்தனையும் அதிமுகவையும் பிரித்துப் பார்க்க முடியாது. அவர் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்” என்றார்.