மூன்று வயது குழந்தைக்கு பாலியல் தொந்தரவு அளித்தவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சென்னை போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்தவர் ரவி(52). இவர், அதே பகுதியைச் சேர்ந்த 3 வயது குழந்தைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக அந்த குழந்தையின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில், எம்கேபி நகர் போலீஸார் வழக்கு பதிவு செய்து, ரவியைக் கைது செய்தனர்.
சென்னை போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில், நீதிபதி ராஜலட்சுமி முன்னிலையில் இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றது.
வழக்கை விசாரித்த நீதிபதி ராஜலட்சுமி, குற்றம் சாட்டப்பட்ட ரவிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளித்தார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு தமிழக அரசு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்குமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.