வரும் செப்.15-ல் திமுக முப்பெரும் விழா நடைபெறும் என்றும், விழா காணொலி வாயிலாகவே திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள திமுக செய்திக் குறிப்பில், "திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக முப்பெரும் விழா , 15-9-2021 புதன்கிழமை, மாலை 5.00 மணியளவில், காணொலி காட்சி வாயிலாக சென்னை, கலைஞர் அரங்கத்தில் நடைபெறும்.
அப்போது, மாவட்டக் கழகச் செயலாளர்/ பொறுப்பாளர்கள், தத்தமது மாவட்டத்திற்குட்பட்ட இடத்தில் விழாவினை காணொலி
காட்சி வாயிலாக காணும் வகையில் உரிய ஏற்பாடுகளை செய்திட வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுக சார்பில், இந்த ஆண்டு நடத்தப்படும் முப்பெரும் விழாவில், பெரியார் விருது மதிவாணனுக்கும், அண்ணா விருது மூக்கையாவுக்கும், கலைஞர் விருது கும்மிடிப்பூண்டியை சேர்ந்த வேணுவுக்கும்,பாவேந்தர் விருது வாசுகி ரமணனுக்கும், பேராசிரியர் விருது முபாரக்கிற்கும் வழங்கப்படும் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.